மன அழுத்தத்திலிருந்து உடனே விடுபட நீங்க இத செஞ்சா போதும்.

By Gowthami Subramani
14 Dec 2023, 18:56 IST

உடல் ஆரோக்கியத்தைப் போல, மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும் அவசியமாகும். அதிக மன அழுத்தம் ஏற்படுவது உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபட சில ஆரோக்கியமான நடைமுறைகளைக் கையாள வேண்டும்

நல்ல தூக்கம்

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. 8 மணி நேரம் தூங்காமல் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு போதுமான நேரம் தூங்குவது நல்லது

யோகா

மன அழுத்தத்தை நீக்க உதவும் சிறந்த வழி யோகா மற்றும் தியானம் செய்வதாகும். இது மனதை அமைதியாக வைத்திருப்பதுடன், நிம்மதியான உணர்வைத் தருகிறது

மகிழ்ச்சியாக இருப்பது

மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். மன அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல், மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சிக்க வேண்டும்

குப்பை உணவைத் தவிர்த்தல்

மன அழுத்தத்தை நீக்க, உடல் ஆரோக்கியம் அவசியம். எனவே வறுத்த நொறுக்குத் தீனிகள், ஃபாஸ்ட்புட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சேர்க்கவும்

சுற்றி உள்ளவர்களிடம் கலந்துரையாடல்

மன அழுத்தத்தைப் போக்க, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இவ்வாறு செய்வது உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மன அழுத்தத்தைத் தடுக்கிறது

நேர்மறையாக இருப்பது

மன அழுத்தத்தை நீக்க, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பது, நேர்மறையான செயல்களில் ஈடுபடுவது அவசியமாகும். இது உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக வைக்க உதவும். எனவே நேர்மறையாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்

இது தவிர, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளில் ஈடுபடுதல், ஆரோக்கியமான உணவுமுறை போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்