பரிட்சையில் தோல்வியுறும் பிள்ளையை பெற்றோர் தேற்றுவது எப்படி?

By Kanimozhi Pannerselvam
01 Mar 2025, 23:05 IST

தேர்வு முடிவை எதிர்கொள்ளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அடிப்படையில் நல்ல உறவு வேண்டும்.

தோழமையான ஓர் உறவை சின்ன வயதிலிருந்தே உருவாக்கி, குழந்தைகள் வளர வளர அந்த உறவை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், ‘எது நடந்தாலும் நம் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம்’ என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு வரும்.

நமக்குக் கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

‘படிக்காமலேயே வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் இருக்கிறார்கள்’ என்று பிள்ளைகளிடம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதையுங்கள்.

தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், ”பரவாயில்லை திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிக்கலாம். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை” என்று மன ஆறுதலைக் கொடுங்கள்.

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். ”ஃபெயில் ஆனா என்னப்பா? இதோட வாழ்க்கையே முடிஞ்சுபோகலை. இதுக்கு மேலயும் இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.