குளிர்கால சோம்பலை வெல்ல இத செய்யுங்க.

By Gowthami Subramani
08 Dec 2023, 16:48 IST

குளிர்காலத்தில் சூரியஒளி குறைவாகவே கிடைக்கும். இதனால் உடலில் செரோடோனின் அளவைக் குறைக்கிறது. மேலும் மோசமான ஊட்டச்சத்து, அதிக மன அழுத்தம், உட்கார்ந்த பழங்கம் போன்றவை சோம்பலை ஏற்படுத்தலாம்

சுறுசுறுப்பாக இருப்பது

குளிர்காலத்தில் வீட்டிலேயே சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்க வேண்டும். உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் யோகா, வீட்டு உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்

நீரேற்றமாக இருத்தல்

நீரேற்றம் மற்றும் சீரான உணவு போன்றவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும். இவை மந்தநிலையை எதிர்த்துப் போராட உதவுகிறது

நிலையான தூக்க அட்டவணை

வழக்கமான தூக்க அட்டவணையைப் பராமரிப்பதன் மூலம் தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கலாம். இது உடல் சோம்பல் உணர்வுகளை எதிர்த்துப் போராட வழிவகுக்கிறது

சூரிய ஒளி வெளிப்பாட்டை அதிகரிப்பது

குளிர்காலங்களில் சூரிய ஒளி வெப்பத்தினைப் பெறுவது அவசியமாகும். இது உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இவை மனநிலை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது

வசதியான சூழலை உருவாக்குதல்

சூடான போர்வைகள், விளக்குகள் போன்ற குளிர்காலத்துக்கு ஏற்ற வசதியான சூழலைப் பயன்படுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கலாம். இது சோம்பலை நீக்கும்

நினைவாற்றல் மேம்பாடு

ஆழ்ந்த சுவாசம், தியானம் போன்ற நினைவாற்றல் நுட்பங்களின் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க முடியும். இவை மன நலனை மேம்படுத்த உதவுகிறது