மென்மையான பாதங்களை இயற்கையாக பெறுவதற்கான சூப்பர் டிப்ஸ்

By Balakarthik Balasubramaniyan
16 Jun 2023, 16:06 IST

வாரத்திற்கு ஒரு முறையாவது பாதங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக மாறும். மேலும் உங்கள் பாதங்கள் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.

சூடான நீரில் கால்களை வைக்கவும்

ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் உப்பு, சில துளிகள் எசென்ஷியல் ஆயில் மற்றும் ரோஜா பூக்களைச் சேர்க்கவும்.உங்கள் இரண்டு கால்களையும் இந்தத் தண்ணீரில் 15 நிமிடங்கள்வரை வைக்கவும். தினமும் இந்த முறையில், உங்கள் கால்களை வைப்பதன் மூலம் புத்துணர்ச்சி பெறலாம்.

கால்களை ஆழ்ந்த சுத்தம் செய்யவும்

முகத்தைப் போலவே கால்களில் உள்ள இறந்த செல்களையும் வெளியேற்ற வேண்டியது அவசியம். இதைச் செய்வதற்கு, படிகக்கல்லைப் பயன்படுத்தி சர்க்கரை அல்லது உப்பைத் தொட்டு உங்கள் பாதங்களைத் தேய்க்க வேண்டும். உங்கள் விரல்கள், கணுக்கால் மற்றும் நகங்களைச் சுற்றி நன்கு தேய்க்கவும்.இது இறந்த சரும செல்களை அகற்றும்.

கால்களுக்கான மாஸ்க்/பேக் பயன்படுத்துங்கள்

உங்கள் பாதங்களை ஆழ்ந்த சுத்தம் செய்தபிறகு, உங்கள் கால்களின் மென்மையை அதிகரிக்க மாஸ்க் அல்லது பேக் போட்டுக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், பச்சை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இதை உங்கள் பாத்தங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

கால்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவுங்கள்

கால்களுக்குப் பேக் போட்டுக் கழுவிய பிறகு, மாய்ஸ்சரைசர் தடவ வேண்டியது அவசியம்.இது உங்கள் கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. கற்றாழை அல்லது வெள்ளரிக்காயால் செய்யப்பட்ட மாய்ஸ்சரைசரை தடவலாம்.

கால்களுக்கான மசாஜ்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உங்கள் கால்களை நன்கு கழுவுங்கள். இதற்குப் பிறகு தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்யவும். இறுதியாக, சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.இது பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.மேலும் மன அழுத்தத்தையும் குறைக்கஉதவுகிறது.

இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் பாதங்களை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்.