ஃபுட்பாய்சனை குணமாக்க எளிமையான வீட்டு குறிப்புகள்!

By Kanimozhi Pannerselvam
06 Jan 2025, 08:28 IST

ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிடலாம்.

கொதித்து இறக்கிய நீரில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு 15 நிமிடம் மூடி வைத்து விட்டு, அந்த நீரைப் பருகினால் நல்லது.

துளசிச் சாறுடன் கொஞ்சம் தேனைக் கலந்து சாப்பிடுங்கள்.

வாழைப்பழம் அல்லது ஆப்பிளை நன்கு மிக்ஸியில் போட்டு அடித்து தண்ணீராக தரலாம்.

லெமன் சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தாலும் ஃபுட்பாய்சன் விரைவில் குணமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஃபுட்பாய்சன் கண்டவர்கள், சுத்தமான தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.