வைரம் போல மின்னும் பற்களும் இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
13 Jun 2025, 17:11 IST

ஆரோக்கியமற்ற உணவுமுறை, போதுமான பராமரிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் பற்கள் நிறம் மாறி காணப்படும். இவ்வாறு பற்களின் நிறம் மஞ்சள் கரையுடன் இருக்கும் போது சிரிப்பதற்கு கூட தயக்கம் உண்டாகும். இதில் மஞ்சள் கரை பற்களை வெண்மையாக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

வேம்பு பயன்பாடு

பற்களைத் துலக்க வேம்பு கிளைகளைப் பயன்படுத்துவது கறைகளைப் போக்க உதவுகிறது. வேம்புவில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்பட்டு, பற்களை பராமரிப்பதுடன், வெண்மையாக்கவும் உதவுகிறது

மூலிகை பயன்பாடு

சில இயற்கையான மூலிகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாயில் ஏற்படும் புண்களைக் குறைக்கலாம். உதாரணமாக, தண்ணீரில் திரிபலாவை சேர்த்து கொதிக்க வைத்து, வெதுவெதுப்பாக்கி பின், அந்த நீரில் வாயைக் கழுவலாம். இது பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க உதவுகிறது

இருமுறை பல்துலக்குவது

உணவுக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் பல் துலக்கலாம். குறிப்பாக சாக்லேட் போன்ற ஒட்டும் உணவுகளை சாப்பிட்ட பின், கட்டாயம் பல் துலக்குவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரு நாளைக்கு குறைந்தது இரு முறையாவது பல் துலக்க வேண்டும்

நாக்கை ஸ்க்ரப் செய்வது

வாய்வழி குழியை சுத்தம் செய்யவும், பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும் நச்சுக்களை அகற்றவும் நாக்கை ஸ்க்ரப் செய்யலாம். இவ்வாறு வாய்குழியை சுத்தம் செய்வதன் மூலம் பற்களின் நிறத்தை மாற்றலாம்

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது வாயில் எண்ணெய் ஊற்றி எல்லா பக்கமும் சுழற்றுவதைக் குறிக்கிறது. இது சிறந்த ஆயுர்வேத முறையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களில் காணப்படும் பாக்டீரியாக்களை அகற்றலாம். மேலும் இது வாய்ப்புண்களை அகற்றவும் உதவுகிறது

இந்த எளிய வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் பற்களைச் சுத்தம் செய்யலாம். மேலும் இது பற்களில் காணப்படக்கூடிய மஞ்சள் கறைகளைப் போக்குவதுடன், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது