வைரஸ் பாதிப்புகள், மாசுபட்ட உணவு அல்லது நீர், உணவு அழற்சி செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்
வீட்டு வைத்தியங்கள்
வயிற்றுப்போக்கு தீவிரமடைவதால் எடை இழப்பு, காய்ச்சல், வாந்தி, கடுமையான வயிற்று வலி போன்றவை ஏற்படலாம். இதைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்
மோர் மற்றும் இஞ்சி
கெட்டியான தயிரைக் கட்டிகள் இல்லாமல் கலக்கி, அதில் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி மற்றும் ஒரு டம்ளர் நீர் சேர்த்து குடிக்கலாம். இது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதுடன், உடலுக்கு நீர்ச்சத்தையும் தருகிறது
நெய்யுடன் இஞ்சி நாட்டுச்சர்க்கரை
நாட்டுச்சர்க்கரை ஒரு ஸ்பூன், ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய், கால் ஸ்பூன் சுக்குப் பொடி போன்றவற்றைக் கலந்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்
பிளாக் டீ, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு
பிளாக் டீயுடன், எலுமிச்சைச் சாறு சிறிதளவு, 2 சிட்டிகை சுக்குப் பொடி மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைக் குடிக்க வயிற்றுப்போக்கைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்
பெருஞ்சீரகம், சுக்குத்தூள்
பெருஞ்சீரகத் தூள் மற்றும் சுக்குப்பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து கொதிக்க வைத்து காலை, மாலை என இரு வேளைகளிலும் குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும்
சுக்குப்பொடி, வெந்நீர், நாட்டுச் சர்க்கரை
வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் சுக்குப் பொடி, அரை ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வயிற்றுப் போக்கு குறையலாம்
சாதம், நெய், தயிர்
சாதத்துடன் நிறைய தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட, சில மணி நேரங்களிலேயே வயிற்றுப் போக்கு நின்று விடும்