குழந்தைகளுக்குக் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்திய முறைகள்
By Balakarthik Balasubramaniyan
23 Aug 2023, 20:01 IST
குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் வந்தால், உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்.
உறுதி செய்வது
முதலில் குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளதா என்பதை தெர்மாமீட்டர் கொண்டு உறுதிபடுத்த வேண்டும். 100 டிகிரி செல்சியத்திற்கும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரியவர்களுக்குச் செய்வது போலவே, உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க பருத்தி துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.
துளசி நீர்
குழந்தைக்குக் காய்ச்சல் வந்தவுடன், குடிநீரில் துளசி இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் கொடுக்க காய்ச்சல் குணமாகும்.
நீர்ச்சத்து
குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். இது வறட்சியை உண்டாக்கும். இதனைக் குறைக்க அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.
உலர் திராட்சை
உலர் கருப்பு திராட்சையை நீரில் ஊறவைத்து, பின் அதைப் பிழிந்து சில துளி எலுமிச்சைச் சாறு கலந்து கொடுக்கலாம். இது காய்ச்சலால் நாவில் ஏற்படும் கசப்புக்கு மருந்தாக அமையும்.