உங்கள் வீட்டில் சளி மற்றும் இருமலுடன் போராடும் வயதானவர்கள் உள்ளார்களா? அவர்களுக்கான வீட்டு வைத்தியம் இங்கே.
மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் என்ற அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது நெஞ்சி சளி மற்றும் இருமலை போக்க உதவுகிறது. மஞ்சளை பாலுடன் சேர்த்து குடிப்பது, இருமலை அடியோடு நிறுத்த உதவுகிறது.
பூண்டு பால்
பாலை கொதிக்க வைத்து, அது நன்கு கொதித்து வரும் நேரத்தில் 3 பல் பூண்டை நச்சு பாலில் சேர்க்கவும். இந்த கலவை நன்று கொதித்தவுடன், இதனை வெதுவெதுப்பாக குடிக்கவும். இது இருமலை தடுக்க உதவும்.
இஞ்சு சாறு
தண்ணீரில் இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வெதுவெதுப்பாக குடிக்கவும். இது நெஞ்சு சளியை வெளியேற்ற உதவும்.
மிளகு
வயதானவர்களுக்கு நெஞ்சு சளி அதிகமாக இருக்கும் போது, அவர்களுக்கு மிளகு ரசம் அல்லது மிலகு பால் கொடுக்கவும். இது அவர்களது நெஞ்சு சளியை வெளியேற்ற உதவுகிறது.
மாதுளைப்பழச்சாறு
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, உங்களுக்கு மிதமான உணர்வை அளிக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, சளி மற்றும் இருமலை நீக்க உதவுகிறது.
இந்த பதிவில் கூறிய அனைத்தும் நன்மைகள் தரும் என்றாலும், மிதமான அளவு முக்கியம். உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், மருத்துவரிடம் கேட்டு சாப்பிடவும்.