முகப்பருக்களால் உங்கள் முக அழகு பாதிக்கப்படலாம்.சில சமயங்களில், மேக்கப் பயன்படுத்தி முகப்பருக்களை மறைக்கலாமே தவிர, இது நிரந்தர தீர்வாக இருக்க முடியாது.
எதனால் வருகிறது?
பருக்கள் பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றன.பெரும்பாலான மக்கள் தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் முகப்பருவால் பாதிக்கப்படுகின்றனர். முகப்பருவை தவிர்க்க இந்த குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.
பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.4-5 பூண்டு பற்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதைப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால், முகப்பருக்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
டீ ட்ரீ ஆயில்
இதில் கிருமிநாசினி மற்றும் நுண்ணுயிர் எதிர்பபு பண்புகள் உள்ளன. இது முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாவை தடுக்கிறது.இதனுடன் 2-4 சொட்டு கற்றாழை ஜெல்லை கலந்து தடவுங்கள்.
முல்தானி மிட்டி
நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட முல்தானி மிட்டி பயன்படுத்துவதால், அதிகப்படியான சருமமெழுகு உற்பத்தியாகாது. மேலும் இது சருமத்தை சுத்தப்படுத்துகிறது.முல்தானி மிட்டியை ரோஸ் வாட்டருடன் கல்ந்து, முகத்தில் தடவி, உலர்ந்த பின் கழுவும்.
ஆப்பிள் சிடர் வினிகர்
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரில் அரை டீஸ்பூன் தண்ணீர் கலக்கவும். இதைப் பஞ்சின் உதவியுடன, பருக்கள்மீது தடவி, பத்து நிமிடங்கள் கழித்து கழுவவும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் PH அளவைப் பராமரிக்கலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் கிருமிநாசினி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.கற்றாழை ஜெல்லை முகப்பருவில் தடவி 25 நிமிடம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.முடிந்தவரை வீட்டில் இருக்கும் இயற்கையான கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள்.
இந்தக் குறிப்புகள் உங்கள் சருமத்தின் PH அளவை சமநிலைப்படுத்துவதோடு, முகப்பருக்களையும் குறைக்கிறது.