மஞ்சள் காமாலை வரவே கூடாதா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடணும்

By Gowthami Subramani
04 Oct 2023, 16:46 IST

மஞ்சள் காமாலை

கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை நோய் கல்லீரல் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதிலிருந்து பாதுகாக்க சில உணவுகளைச் சேர்க்க வேண்டியது அவசியம்

கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலை

மனித உடலில் உள்ள பெரிய உறுப்பு ஈரல் ஆகும். இந்த ஈரலின் செயல்பாடுகள் ஏராளம். இந்த ஈரல் பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்படலாம்

முள்ளங்கி இலை

முள்ளங்கி இலையை அரைத்து சாறு தயாரித்து அருந்துவது மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபட உதவுகிறது

பப்பாளி இலை

பப்பாளி இலையை அரைத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து இரண்டு வாரங்களுக்கு உண்டு வர ஈரல் பிரச்சனைகள் குணமாகும். பப்பாளி இலை கொடூரமான டெங்கு நோயைச் சரி செய்யக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது

மோர்

மோரில் கொழுப்புச் சத்து ஏதும் இல்லை. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லதாகும். சிறிது மோரில் உப்பு மிளகு, சீரகம் சேர்த்து குடித்து வர மஞ்சள் காமாலையை குணப்படுத்தலாம்

கீரை

இது பொதுவாக அனைத்து வகையான வியாதிகளுக்கும் தீர்வாக அமைகிறது. கீரை உண்பத் ஈரல் சம்பந்தமான நோய்களை முக்கியமாக மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுதலை தருகிறது

எலுமிச்சைப்பழம்

இதில் உள்ள சத்துக்கள், ஈரலில் படிந்திருக்கும் கிருமியைப் போக்க பெரிதும் உதவுகிறது. இது மஞ்சள் காமாலையை நீக்க உதவுகிறது

கரும்புச்சாறு

செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைக் குணமாக்க கரும்புச்சாறு பெரிதும் உதவுகிறது. இது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களை வேகமாகக் குணமடையச் செய்கிறது