வயிற்று உப்புசத்தைக் குறைக்க நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய குறிப்புகள் இங்கே

By Gowthami Subramani
22 Jun 2025, 21:35 IST

இன்றைய காலத்தில் தவறான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் மற்றும் மோசமான செரிமானம் காரணமாக வாயு, வயிறு உப்புசம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

அறிகுறிகள்

வயிறு உப்புசம் மற்றும் வீக்கத்தின் அறிகுறிகளில் ஏப்பம், வயிற்றில் கனத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்றவை அடங்கும். எனினும், வீட்டில் உள்ள சில உணவுப்பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதன் அறிகுறிகளைக் குறைக்கலாம்

பெருங்காயம்

வயிறு உப்புசம் ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தைக் கலந்து குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணத்தைப் பெறலாம். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று வாயுவைக் குறைக்க உதவுகிறது

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி தண்ணீரை தேநீர் போல சூடாக்கி, அதில் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் பருகலாம். இது வீக்கம் மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்

வெந்தய நீர்

இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வீக்கம், அஜீரணம், வாயு மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்

சீரக தண்ணீர்

சீரக தண்ணீர் குடிப்பது வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு சீரகத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும்

கிரீன் டீ

உணவுக்குப் பிறகு சூடான கிரீன் டீ குடிப்பது வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது