மாதவிடாயின் போது சில பெண்களுக்கு இரத்ததின் நிறத்தில் மாற்றம் ஏற்படலாம். கருப்பை பலவீனமாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்தால் இரத்தம் தாமதமாக வெளியேறும் போது அடர் அல்லது கருப்பு நிறத்தில் கெட்டியாக வெளியேறும்
வீட்டு வைத்தியம்
இதற்கு மருத்துவரிடம் செல்ல தேவையில்லை. சில வீட்டு வைத்திய முறைகளைக் கொண்டு, கருப்பையின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் கருப்பு நிற மாதவிடாயைத் தவிர்க்கலாம்
உப்பு நீர்
வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, தினமும் 3 வேளை குடித்து வர, மாதவிடாய் காலத்தில் கெட்டியாக இரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்
கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து அரைத்து, மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 3 மாதம் உட்கொண்டு வர, கருப்பையின் வலிமை அதிகரிக்கும்
குங்குமப்பூ
ஒரு கப் பாலில் 2-3 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து தினமும் காலை மற்றும் இரவில் குடித்து வர, கருப்பைச் சுவர் வலிமையாகி, கருப்பையில் உள்ள எஞ்சிய இரத்தம் வெளியேறும்
சோம்பு நீர்
சோம்பு நீரை தினமும் 3 வேளை குடித்து வர, கருப்பைச்சுவர் வலிமையடையலாம். இதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்
இஞ்சி டீ
இஞ்சி டீயைக் குடிப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்கும். இஞ்சி சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் கால பிரச்சனைகள் நீங்கும்
மாட்டுப்பால்
ஒரு கப் மாட்டுப்பாலில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் சிறிது தேன் கலந்து, குடித்து வர இரத்தம் கருப்பு நிறத்தில் வெளியேறுவதைத் தவிர்க்கலாம்
திராட்சை சாறு
கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுவதைச் சந்திக்கும் பெண்கள், தினமும் திராட்சை சாறு குடித்து வர, இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்