ஆசனவாய் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் தரும் வீட்டு வைத்தியங்கள்

By Kanimozhi Pannerselvam
02 Apr 2025, 13:31 IST

சூடான நீரில் கழுவுதல்

சூடான நீரைப் பிடித்து அதில் ஆசனவாய் பகுதி மூழ்கி இருப்பது போல் சிறிது நேரம் அமர்வது எரிச்சல், அரிப்பு போன்றவற்றை நீக்க உதவும்.

ஐஸ் பேக்

ஆசன வாயில் இடத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்கவும், வலியைக் குறைக்கவும் உதவும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவது அரிப்பு மற்றும் எரிச்சலைத் தணிக்க உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை தடவுவது வீக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகும். விளக்கெண்ணயைப் பயன்படுத்துவதும் ஆசனவாய் அரிப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும்.

மசாலா, சிட்ரஸ் பழங்களை தவிர்க்கவும்

மலம் கழிக்கும்போது அரிப்பு ஏற்பட்டால், காஃபின், ஆல்கஹால், தக்காளி, மசாலா மற்றும் சிட்ரஸ் பழங்களை தவிர்ப்பது நல்லது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பழங்களும், கீரைகளும் இதற்கு நிறையவே உதவுகின்றன. காய்கறிகளில் புடலங்காய் தோல், விதை, வெண்டைக்காய், போன்றவற்றை சாப்பிடலாம்.

பூண்டு நீர் குளியல்

நான்கைந்து பூண்டு பற்களை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி, குளிர்ந்ததும் அந்த தண்ணீரை கொண்டு ஆசனவாய் பகுதியை கழுவிவந்தால், அரிப்பு நீங்கும்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வெட்டி, அதன் துண்டுகளை ஆசன வாயில் வைத்து சிறிது நேரம் தேய்த்தாலும் அரிப்பு நீங்குமாம்.

துத்தி இலை

துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, லேசான சூட்டுடன் ஆசனவாயில் வைத்து கட்டிவந்தால் எரிச்சல், வலி நீங்குமாம்