சளி, காய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்!

By Kanimozhi Pannerselvam
20 Oct 2023, 18:40 IST

1. இஞ்சி:

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சில துண்டு இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து தேநீர் தயார் செய்து குடிக்கலாம். இது தொண்டை வலி மற்றும் குமட்டலை குறைக்கவும் உதவும்.

2. தேன்:

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. தேநீரில் எலுமிச்சையுடன் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி குறையும். இது இருமல், சளியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

3. பூண்டு:

பூண்டில் உள்ள அல்லிசின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. பூண்டு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் ஆதாரமாக இருக்கிறது. பூண்டு சளி மற்றும் காய்ச்சல் உட்பட பல பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. பூண்டு உடன் இஞ்சி மற்றும் தேன் கலந்த தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

4. புரோபயாடிக்குகள்:

புரோபயாடிக்குகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவதோடு, சுவாச நோய்த்தொற்றுக்களை குறைக்க உதவுகிறது.

5. வைட்டமின் சி நிறைந்த பழங்கள்:

நெல்லிக்காய், அன்னாசி, எலுமிச்சை, கிவி போன்ற வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி-யில் லிம்போசைட்டுகள் மற்றும் பாகோசைட்டுகள் எனப்படும் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டும் ஆற்றல் உள்ளது.

6. துளசி:

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட துளசி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதோடு, வறட்டு இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. துளசி தேநீர் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவை நீக்குகிறது. ஐந்து கிராம்பு மற்றும் 8 துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து ஆறவிடவும். இந்த பானத்தை ஒரு நாளைக்கு பல முறை குடித்து வந்தால் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

7.மிளகு:

குளிர்காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள், கருப்பு மிளகு மற்றும் தேன் தேநீரை தினமும் இரண்டு முறை குடித்து வர சளி, காய்ச்சல் நீங்கும்.

8. மஞ்சள்:

மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்ப பண்புகள் சளி மற்றும் காய்ச்சலை நீக்குகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.