எச்சரிக்கை... வெள்ளரிக்காய் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
31 Mar 2025, 20:53 IST

வெள்ளரிக்காய் சாப்பிட சரியான நேரம் எது?

காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காயை டீடாக்ஸ் பானமாக எடுத்துக் கொண்டால் வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

மதியம் எப்படி சாப்பிடலாம்?

மதியம் வெள்ளரிக்காயை சாலட் வடிவில் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உணவை விரைவாக ஜீரணிக்கவும் உதவுகிறது.

நீரேற்றம்

இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் செரிமானத்திற்கு உதவும்.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

இரவில் அதிகமாக வெள்ளரிக்காய் சாப்பிடுவது வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக வெள்ளரிக்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அது அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

எடையிழப்புக்கு உதவுமா?

வெள்ளரிக்காய் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும். இது எடை இழப்புக்கு உதவுகிறது.