தினமும் ஆம்லா டீ குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
13 Jan 2025, 14:34 IST

அஜீரணத்திற்கு குட்பை

நெல்லிக்காய் டீயை தினமும் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடைகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.

சர்க்கரை அளவு கட்டுப்படும்

ஆம்லா டீ குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். இதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

எதிர்ப்பு சக்தி டபுளாகும்

வைட்டமின் சி நிறைந்த ஆம்லா டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆம்லா டீ உடல் பருமனை குறைக்கும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

சரும பாதுகாப்பு

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் விரைவில் தோன்றும் சுருக்கங்களை தடுக்கிறது.

ரத்த ஓட்டம் மேம்படும்

நெல்லிக்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு

நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குரோமியம் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை சேமிப்பை குறைக்கிறது.

புற்றுநோய் தடுப்பு

சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் சக்தியும் நெல்லிக்காய்க்கு உண்டு. எனவே வழக்கமான டீ காபிகளை விட்டுவிட்டு ஆம்லா டீயை முயற்சிக்கவும். சில நாட்களில் நல்ல பலனைக் காண்பீர்கள்.