கருகருன்னு முடி வளர... கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க!
By Kanimozhi Pannerselvam
09 Jan 2025, 21:25 IST
கறிவேப்பிலை பேஸ்ட்
1/4 கப் கறிவேப்பிலையை 1/2 கப் தயிருடன் கலந்து பேஸ்ட் செய்யவும். முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் நன்கு கூந்தலை அலசவும். இதனை வாரத்திற்கு 2–3 முறை செய்ய வேண்டும்.
கறிவேப்பிலை நீரில் முடியை அலசுங்கள்
2 கப் தண்ணீரில் 15–20 கறிவேப்பிலையை போட்டு தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். வழக்கம் போல் ஷாம்பு போட்டு, பின்னர் உங்கள் தலைமுடியை கறிவேப்பிலை நீரில் கழுவவும்.
அரை கப் கறிவேப்பிலை, அரை கப், மருதாணி இலைகள் மற்றும் ஒரு நெல்லிக்காய் ஆகியவற்றை ஒரு பேஸ்டாக கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியின் நீளத்தில் தடவி, 20–30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
கறிவேப்பிலை ஹேர் டானிக்
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து, தீ யை அணைத்து, கலவையை குளிர்விக்க விடவும். டானிக்கை வடிகட்டி, உங்கள் தலைமுடியில் தடவவும்.
உணவில் சேருங்கள்
முடிக்கு வெளியே இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை விட உள்ளிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் தான் அவசியமானது. கறிவேப்பிலை பொடியை சாதம் அல்லது காய்கறிகளில் கலந்து சாப்பிடுங்கள். முடி ஊட்டச்சத்துக்காக பால் அல்லது மோருடன் நன்றாக நறுக்கிய புதினா இலைகள்மற்றும் கறிவேப்பிலையை கலந்து சாப்பிடலாம்.