மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

By Balakarthik Balasubramaniyan
05 Sep 2023, 11:30 IST

மஞ்சள் காமாலை

உடலில் தோல், கண்கள் மற்றும் ஈறுகள் போன்றவை மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது பெரிய நோயாக இல்லை எனினும் மஞ்சள் காமாலை கல்லீரல் புற்றுநோய், சிரோசிஸ், ஹெபடைடிஸ் போன்றவை அடிப்படை காரணமாகும்

உணவு முறைகள்

மஞ்சள் காமாலையை வர விடாமலும், வந்த பின் வேகமாக குணமாகவும் சில உணவு முறைகளைக் கையாள்வது அவசியம்

தானியங்கள்

நார்ச்சத்துகள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளிட்டவை தானியங்களில் நிறைந்துள்லன. இவை மஞ்சள் காமாலை சரியாவதை விரைவாக்குகிறது

நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துகளைக் கொண்டுள்ளது. இவை மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது

பழங்கள்

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. இவை செரிமான சக்தியை எளிதாக்குகிறது. இவற்றின் மூலம் மஞ்சள் காமாலையை குணப்படுத்தலாம்

மூலிகை தேநீர்

மூலிகை தேநீரில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை அழித்து மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது