அளவுக்கு மிஞ்சினால் மஞ்சளும் நஞ்சு - இவங்க எல்லாம் தொடவேக் கூடாது!

By Kanimozhi Pannerselvam
08 Nov 2024, 18:49 IST

மஞ்சள் அளவு

தினந்தோறும் குர்குமினாய்டுகளின் நல்ல டோஸை பெற ஒரு நாளைக்கு 500-2000 மில்லிகிராம் மஞ்சள் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

வயிற்று பிரச்சனைகள்

அதிக அளவு மஞ்சள் அல்லது குர்குமின் உட்கொள்வது வயிற்றில் கோளாறு, அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

தலைவலி

450 மி.கி அல்லது அதற்கும் அதிகமான குர்குமின் அளவை உட்கொள்ளும் போது சில நபர்கள் தலைவலி மற்றும் தலைச்சுற்றலை அனுபவிக்கலாம்.

இரத்தப்போக்கு கோளாறு

ஊசி மூலம் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய்

மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லது மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் .

இதயத் துடிப்பு குறைபாடு

ஒரு நாளில் 1,500 கிராம் மஞ்சளை உட்கொண்ட ஒரு நபர் அசாதாரணமான இதயத் துடிப்புக்கு ஆளானதாக கூறப்படுகிறது. எனவே இருதயப் பிரச்சனை இருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக மஞ்சள் உட்கொள்ளக்கூடாது.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மஞ்சள் சப்ளிமெண்ட்ஸைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை கருப்பைச் சுருக்கங்களைத் தூண்டி, சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.