தினமும் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Kanimozhi Pannerselvam
03 Dec 2024, 09:14 IST

குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு பலத்தைத் தரும். இது சோர்வு மற்றும் மன அழுத்தத்தையும் நீக்குகிறது.

ரத்த சோகை குணமாகும்

100 கிராம் பேரீச்சம்பழத்தில் 0.9 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கின்றது. எனவே, இரத்த சோகை உள்ளவர்கள், இரவில் மூன்று முதல் நான்கு பேரிச்சம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின் மறுநாள் காலை ஊற வைத்த தண்ணீருடன் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை எளிதில் குணமாகும்

இதய ஆரோக்கியம்

சாலிசிலேட் எனும் மூலப்பொருள் பேரீச்சம்பழத்தில் இருப்பதால் இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்த உறைதலை தடுப்பதோடு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

ரத்த அழுத்தம்

கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பேரிச்சம்பழம் ஒரு வரப்பிரசாதம். பேரிச்சம்பழத்தை தினசரி உட்கொள்வது கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறது.

சிறுநீரக பிரச்சனை

புரோஸ்டேட் சுரப்பி பிரச்சனை, சிறுநீர் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல்

பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

மூட்டுவலி

பேரீச்சம்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களோடு, வைட்டமின் கே சத்துக்களும் உள்ளது. இது புதிய எலும்பு திசுக்களை உருவாக்குவதோடு மூட்டு மற்றும் முதுகு வலிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.