நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில உணவுச்சேர்க்கைகள்
By Balakarthik Balasubramaniyan
06 Sep 2023, 19:30 IST
சில உணவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த உணவுகளை ஒன்றாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
உணவுடன் பழம்
உணவுகள் செரிமானம் அடைய சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பழங்கள் எளிதில் செரிமானம் அடையும். எனவே உணவு முடிந்த உடன் பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பால், வாழைப்பழம் இரண்டும் சேர்த்த கலவை செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுக்கும். வாழைப்பழ மில்க் ஷேக் அருந்துபவர்கள் செரிமானத்தை ஊக்குவிக்க இலவங்கப்பட்டை சிறிதளவு சேர்க்கலாம்
சிட்ரஸ் பழம் மற்றும் பால்
பாலுடன் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சேர்த்து உண்ணும் போது வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே இந்த கலவையை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
குளிர்பானத்துடன் சீஸ் உணவுகள்
பீட்சா போன்ற சீஸ் உணவுகளை குளிர்பானத்துடன் சேர்த்து குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது அசௌகரியத்தையும், வயிற்று வலியையும் ஏற்படுத்தும்
பாலுடன் மீன்
பால் குளிர்ச்சியானதாகவும், மீன் சூடானதாகவும் இருக்கும். இது இரத்த ஓட்டத்தை பாதிப்பதாக அமைகிறது. எனவே இவற்றை ஒன்றாக உட்கொள்ளக் கூடாது
தக்காளியுடன் வெள்ளரி
தக்காளியுடன் வெள்ளரி சேர்த்து சாப்பிடக்கூடாது. எனவே சாலட்டில் வெள்ளரி மற்றும் தக்காளியைச் சேர்த்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது