கர்ப்பிணி பெண்களுக்கு சுவரொட்டி எவ்வளவு நல்லது தெரியுமா? இதன் நன்மைகளை அறிந்துக் கொண்டால் கண்டிப்பாக இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்.
ஊட்டச்சத்து விவரம்
சுவரொட்டியில் ப்ரோட்டின், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி12, ஜிங்க் போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
இரத்த சோகை நீங்கும்
ஆட்டு மண்ணீரல் எனப்படும் சுவரொட்டி சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது. இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஆட்டு சுவரொட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க உதவுகிறது. இதில் அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளன. குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் அவ்வப்போது ஆட்டு நுரையீரலை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வு
சுவரொட்டியில் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும் திறன் அதிகமாக உள்ளது. எனவே சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் சுவரொட்டியை எடுத்துக் கொள்ளலாம்.
இரும்புச்சத்து தேவை
வெறும் 50 கிராம் சுவரொட்டி என்பது நமது தினசரி இரும்புச்சத்து தேவையில் 100 சதவீதம் வரை பூர்த்தி செய்கிறது. எனவே இரும்புச் சத்து குறைவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தாராளமாக ஆட்டு சுவரொட்டியை சாப்பிடலாம்.
பெருங்குடல் அலர்ஜி
பெருங்குடல் அலர்ஜிக்கு ஆட்டு சுவரொட்டி மிக சிறந்த மருந்தாக இருக்கிறது. சுவரொட்டி சாப்பிடுவதால் பெருங்குடல் அழற்சி வராமல் தடுக்க உதவுகிறது.
முடக்கு வாதம்
முடக்கு வதாம் உள்ளவர்களுக்கு சுவரொட்டி மிக பயனுள்ள சிறந்த உணவாகும். சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் முடக்கு வாதத்தை சீராக்குகிறது. முடக்கு வாதம் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை சுவரொட்டி சாப்பிடலாம்.