பனங்கற்கண்டு
பனை மரத்திலிருந்து பெறப்படும் பனை நீர் அல்லது பதநீரைக் காய்ச்சை தயாரிக்கப்படும் ஒரு பொருளே பனங்கற்கண்டு ஆகும். இதனைச் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்
ஊட்டச்சத்துக்கள்
பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு போன்றவை உள்ளது. இது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
சர்க்கரை மற்றும் தேனைக் காட்டிலும், பனங்கற்கண்டில் குளுக்கோஸ் அளவு குறைவாக உள்ளது. இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது
நரம்பு மண்டல செயல்பாடு
பனங்கற்கண்டில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது இது தசை சுருக்கம் மற்றும் இதயத்துடிப்பு போன்ற நரம்பு மண்டல செயல்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது
செரிமான மேம்பாட்டிற்கு
இதில் இன்யூலின் என்ற நார்ச்சத்து உணவு உள்ளது. தாவர அடிப்படையிலான இந்த நார்ச்சத்து குடலில் உள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது
இரத்த சோகையைத் தவிர்க்க
பனங்கற்கண்டில் சீரான சர்க்கரை அளவு உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும், பெண்களுக்கு PCOS பிரச்சனையைக் குணப்படுத்தவும் செய்கிறது
உடலுக்கு ஆற்றல் தர
உடலுக்கு சோர்வு இல்லாமல், ஆற்றல் தரும் பானமாக பனங்கற்கண்டு உள்ளது. இதில் வைட்டமின் பி, இரும்பு, கால்சியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இதனை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் விரும்பி எடுத்துக் கொள்ளலாம்
அதிக ஆக்ஸிஜனேற்றிகள்
மற்ற சர்க்கரையைக் காட்டிலும் பனங்கற்கண்டில் அதிகளவு தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் உயிரணு சேதத்தைத் தடுக்க உதவுகிறது
உடல் உஷ்ணம் குறைய
உடல் உஷ்ணமாக இருக்கும் போது சின்னம்மை, பெரியம்மை போன்ற வெப்ப காய்ச்சல் ஏற்படலாம். எனவே பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், உடல் சூடு தணியும்