அதிகமாக பால் குடித்தால் ஆபத்து... இந்த 5 உடல் நலக்கோளாறுகள் வருமாம்!
By Kanimozhi Pannerselvam
17 Jan 2024, 15:56 IST
வயிற்று பிரச்சனைகள்
அதிகமாக பால் குடிப்பது வயிறு வீக்கம், குமட்டல் போன்ற அசெளகரியங்களை ஏற்படுத்தலாம். செரிமானத்தில் நொந்தரவு மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
சோர்வு
அதிக அளவில் பால் அருந்துவது நாள் போக்கில் சில குடல் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தக்கூடும். இது சோம்பல் மற்றும் மந்த உணர்வை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முகம் அல்லது உங்கள் தோலின் மற்ற பகுதிகளில் ஒவ்வாமை மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். சிவப்பு முகப்பரு புள்ளிகள் அல்லது தடிப்புகளை நீங்கள் அடிக்கடி கண்டால், உடனடியாக பால் உட்கொள்ளும் அளவை சரி பார்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது நல்லது.
எலும்புகள் வலுவிழக்கும்
வலுவான எலும்புகளை உருவாக்க பால் நல்லது என நம்பப்படுகிறது. இருப்பினும், தேவையான அளவை விட அதிகமாக பால் பருகுவது எலும்புகளின் அடர்த்தி குறைவதற்கு வழிவகுக்கும்.
மூளையை பாதிக்கும்
பால் பொருட்களில் அதிக அளவில் உள்ள கேசீன் உள்ளடக்கம் சில மூளை வாங்கிகளை ஏமாற்றி தவறான சமிக்ஞைகளை வெளியிடக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றன. இதனால் அதிக அளவில் பால் அருந்துவது மூளையின் நினைவாற்றல், கவனம் இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இதயத்திற்கு ஆபத்து
ஆய்வு முடிவுகளின் படி, ஒரு நாளைக்கு மூன்று கிளாசுகளுக்கு மேல் பால் குடிக்கும் ஆண்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தும், பெண்களுக்கு சில வகையான புற்றுநோய்களை உருவாகும் ஆபத்தும் அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.