முகேஷ் அம்பானியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
By Kanimozhi Pannerselvam
23 Feb 2025, 23:14 IST
நாளின் தொடக்கம் எப்படி?
தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழும் முகேஷ் அம்பானி தனது நாளை யோகா மற்றும் தியானத்துடன் தொடங்குகிறார். அதேபோல் சூரிய நமஸ்காரம், ஒரு குட்டி வாக்கிங் என தனது நாளை சுறுசுறுப்பாக ஆரம்பிக்கிறார்.
காலை உணவு என்ன?
முகேஷ் அம்பானியின் காலை உணவு மிகவும் சிம்பிளானது. பழங்கள், பழச்சாறு, இட்லி மற்றும் சாம்பார் ஆகியவற்றில் ஒன்றையே எடுத்துக்கொள்கிறார்.
முகேஷ் அம்பானி மதியம் மற்றும் இரவு உணவிலும் சிம்பிளான இந்திய உணவு வகைகளையே விரும்பி எடுத்துக்கொள்கிறார். பருப்பு, சப்ஜி, அரிசி, சூப்கள் மற்றும் சாலட்களை உள்ளடக்கிய குஜராத்தி வகை உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த பழக்கம் கிடையாது
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. சமூக நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கூட மது அருந்துவது கிடையாது. அத்துடன் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்கிறார்.
கண்டிப்பாக இதை சாப்பிடுவதில்லை
பல பார்ட்டிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் கூட, முகேஷ் அம்பானி சைவ உணவில் உறுதியாக இருக்கிறார் மற்றும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது கிடையாது.