மஞ்சளை இப்படி எடுத்துக்கோங்க! தொப்பை இருந்த இடமே தெரியாது

By Gowthami Subramani
31 Oct 2024, 23:23 IST

மஞ்சளில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் எடை குறைய மஞ்சளை எவ்வாறு சாப்பிடலாம் என்பது குறித்து காணலாம்.

ஊட்டச்சத்துக்கள்

பச்சை மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்றவையும் நிறைந்துள்ளது

மஞ்சள், இஞ்சி டீ

இதில் இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்து வர உடலில் வீக்கம் குறைந்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

சூடான மஞ்சள் நீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

மஞ்சள் பால்

தூங்கும் முன் மஞ்சள் பால் அருந்துவது உடலை தளர்ச்சியாக வைப்பதுடன், தூங்கும் போது கொழுப்பை எரிக்க உதவுகிறது

மஞ்சள், இலவங்கப்பட்டை நீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரிக்கிறது

மஞ்சள் டீ

ஒரு கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கலாம். பின், இதை வடிகட்டி, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும்

எலுமிச்சை மஞ்சள் நீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 சிட்டிகை மஞ்சள் மற்றும் அரை எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கொழுப்பு எரிக்கப்பட்டு, செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது

மஞ்சள், தேன்

மஞ்சள் மற்றும் தேன் கலந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம், எடை இழப்பு எளிதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுகிறது