அரிசியில் ஏராளமான வகைகள் உள்ளன. இதில் பூங்கார் அரிசி வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிசியாகும். இது பெண்களுக்கு எக்கச்சக்க நன்மைகளைத் தருகிறது. இதில் பூங்கார் அரிசி தரும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
பூங்கார் அரிசியில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் போன்றவையும் உள்ளது
பெண்களின் ஆரோக்கியத்திற்கு
இது ஹார்மோன் சமநிலை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த அரிசியானது பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான ஹார்மோன் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
பூங்கார் அரிசியில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது
பசையம் இல்லாத
பூங்கார் அரிசி இயற்கையாகவே பசையம் இல்லாததாகும். இது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது
இரத்த சர்க்கரை மேலாண்மை
பூங்கார் அரிசியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
பூங்கார் அரிசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
இந்த அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது