இது தெரிஞ்சா இனி காளான் சாப்பிடாதவங்களும் சாப்பிடுவாங்க.

By Gowthami Subramani
09 Jan 2024, 09:26 IST

காளான சாப்பிடுவதை பெரும்பாலானோர் விரும்புவர். இவை சுவையானது மட்டுமல்லாமல், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிக்க மூலமாகும். இதில் காளான் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

ஷிடேக் மற்றும் மைடேக் காளான்களில் பீட்டா-குளுக்கன்ஸ் கலவைகள் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது

உடல் எடை குறைய

காளான்களில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

குடல் ஆரோக்கியத்திற்கு

குடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டும் பண்புகளைக் காளான் கொண்டுள்ளது

எலும்பு வலிமைக்கு

காளான்களில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடல் கால்சியத்தை உறிஞ்சி, ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிகளுக்கு

காளான்களில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. சிவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் பாலிசாக்கரைடு நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் நன்மையைத் தருகிறது

இதய நோய் அபாயத்தைக் குறைக்க

காளான்களில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிபிளேட்லெட் போன்றவை நிறைந்துள்ளன. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது