மீன்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

By Balakarthik Balasubramaniyan
12 Sep 2023, 16:19 IST

மீன்களின் ஆரோக்கிய நன்மைகள்

அசைவப் பிரியர்களையும் மீன்னையும் எப்போதும் பிரிக்க முடியாது. சுவையான உணவான மீனில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

குறைந்த கொழுப்புகள்

மீன்களில் குறைந்த அளவிலான கொழுப்புகள் உள்ளன. இதில் உயர் தரமான புரதங்கள் உள்ளது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி2 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

சிறந்த தாதுக்கள்

மீன்களில் இரும்பு, துத்தநாகம், அயோட்டின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் மிகவும் நன்மை பயக்கிறது. இயற்கையாகவே பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது.

கண் ஆரோக்கியம்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கண்களில் உண்டாகும் கோளாறுகள் நீங்கும்.

தலைமுடி ஆரோக்கியம்

அதேபோல் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

முழுமையாக படித்ததற்கு நன்றி

வறுத்த மீன்களுக்கு பதிலாக வேகவைத்த மீன்களை சாப்பிடுங்கள். ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகளை சந்திக்கும்பட்சத்தில் மருத்துவர் பரிந்துரை பெறுவது நல்லது.