மல்லி தூளில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

By Ishvarya Gurumurthy G
02 Oct 2023, 13:30 IST

சமையலில் சுவையை மெருகேற்றும் மல்லி தூளில் பல நன்மைகள் ஒளிந்திருப்பது உங்களுக்கு தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.

இரத்த சர்க்கரையை நிர்வகிக்கும்

மல்லி தூள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும். உயர் இரத்த சர்க்கரை கொண்டவர்கள், தினமும் உணவில் மல்லி தூள் சேர்த்து வர இரத்த சர்க்கரை குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. இது இன்சிலின் அளவை கணிசமாக அதிகரிக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பார்கின்சன், அல்சைமர் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் உள்ளிட்ட பல மூளை நோய்கள் வீக்கத்துடன் தொடர்புடையவை. ஆனால் மல்லி தூளில் உள்ள அலெற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களில் இருந்து பாதுகாக்கும். மல்லி தூளில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள் மூளை வீக்கத்தைக் குறைக்கும். மேலும் நினைவாற்றலை மேம்படுத்தும் மற்றும் கவலை அறிகுறிகளைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மல்லி தூள் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் உடலில் ஏற்படும் அலெற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடும்

மல்லி தூளில் உள்ள டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் ஆகியவை உள்ளன. இவை நுரையீரல், புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மல்லி தூள் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு அளவுகள் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளை குறைக்கும். இதில் உடலில் உள்ள அதிகபடியான சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இது கொலஸ்ட்ராலை குறைக்க மல்லி தூள் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மல்லி தூள் செரிமான அமைப்பை சீராக செயல்படுத்த உதவுகிறது. குடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மல்லி தூளை தினசரி உணவில் சேர்த்து வர, அவர்கள் அடிக்கடி அனுபவிக்கும் வீக்கம், அசௌகரியம் போன்ற விரும்பத்தகாத செரிமான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.