சாலையோரங்களில் முட்கள் நிறைந்து காணப்படும் செடிதான் சப்பாத்திக்கள்ளி. இதன் பலம்
சத்துக்கள் நிறைந்தது
முட்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளியில் ஏ, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்களாலும், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களாலும் நிரம்பியுள்ளது.
இதயத்திற்கு நல்லது
சப்பாத்திக்கள்ளி பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில், உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. மேலும், இது உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது.
உடல் பருமனை குறைக்கும்
சப்பாத்திக்கள்ளியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் பருமனை குறைக்கிறது. மேலும், இதை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் கூடுதல் கொழுப்பு சேராது.
சர்க்கரை நோய்
சப்பாத்திக்கள்ளி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
சளி மற்றும் இருமல்
குளிர் காலத்தில் இருமல் மற்றும் சளி பிரச்சனை கணிசமாக அதிகரிக்கிறது. இந்நிலையில், சப்பாத்திக்கள்ளி பழத்தின் சாற்றில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும். இதனால் இருமல், சளி பிரச்சனைகள் நீங்கும்.
செரிமான ஆரோக்கியம்
நார்ச்சத்து வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கும் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும்.
எப்படி சாப்பிடணும்?
சப்பாத்திக்கள்ளி பழத்தை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது தவிர, இதன் சாறு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.