சிட்ரஸ் பழமான ஆரஞ்சை வாழைப்பழத்துடன் சேர்ப்பது செரிமான சிக்கல்களை உருவாக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலத்தன்மை வாழைப்பழத்துடன் கலந்து வயிற்றில் உப்பசம் மற்றும் வலியை உருவாக்கும்.
தர்பூசணி + வாழைப்பழம்
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது, வாழைப்பழத்தில் அடர்த்தியான நார்ச்சத்து உள்ளது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சரியாக கலக்காவிட்டால், வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கும்.
ஆப்பிள் + ஆரஞ்சு
இந்த இரண்டு பழங்களும் செரிமானத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் வேறு வேறானது. இதனை ஒன்றாக எடுத்துக் கொள்ளும் போது செரிமான அமைப்பில் குழப்பம் ஏற்பட்டு, வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஸ்ட்ராபெரி + திராட்சை
இரண்டு பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை. மேலும் இதிலுள்ள அமிலத்தன்மை மற்றும் சர்க்கரை வயிற்றில் நொதித்தல் செயல்முறையை ஊக்குவிக்கக்கூடும். இது வயிற்றில் வாயுத்தொந்தரவை ஏற்படுத்தும்.
அன்னாசி + மாம்பழம்
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது இது பழத்துடன் வினைபுரிந்து நொதித்தல் செயல்முறைக்கு வழிவகுக்கிறது. இதனால் வயிற்றில் அசெளகரியம் மற்றும் குமட்டல் ஏற்படக்கூடும்.
கொய்யா + வாழைப்பழம்
இந்த இரண்டு பழங்களும் நார்ச்சத்து நிறைந்தவை. ஆனால் ஒன்றுடன் ஒன்று சேராது. இதனால் வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைஅள் ஏற்படலாம்.