பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உணவுகளை மாற்றுவது அவசியம். அதன் படி, மழைக்காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டியது அவசியம்
தயிர்
தயிர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், மழைக்காலத்தில் தயிர் எடுத்துக் கொள்வது உடல் உபாதைகளாக ஒவ்வாமை, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, இக்காலத்தில் தயிர் உண்பதைத் தவிர்ப்பது நல்லது
கடல் உணவு
மழைக்காலங்களில் கடல் உணவுகளைத் ஹவிர்க்க வேண்டும். ஏனெனில், இக்காலத்தில் பெரும்பாலும் பழைய மற்றும் ரசாயனங்கள் கலந்த கடல் சார்ந்த உணவுகளையே விற்பனை செய்வர். மழைக்காலத்தில் இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது
இலைக்காய்கறிகள்
இவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பினும், மழைக்காலத்தில் அசுத்தமான இடங்களில் இலைக் காய்கறிகள் வளரலாம். இதிலுள்ள பாக்டீரியா தொற்றுகள், உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்
குளிர்பானங்கள்
குளிர்பானங்கள் குறிப்பாக பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது வாயுத்தொல்லை, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற சிக்கலை ஏற்படுத்தலாம்
பழங்கள் மற்றும் சாலட்டுகள்
இவை சுற்றுச்சூழல் மற்றும் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளால் மாசுபடலாம். எனவே முடிந்தவரை வீட்டிலேயே சுத்தத்தை உறுதிபடுத்தியவாறு அமைந்த புதிய பழங்கள் மற்றும் சாலட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்
வறுத்த, எண்ணெய் உணவுகள்
இவற்றை மழைக்காலத்தில் எடுத்துக் கொண்டாலும், வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்