அரிசியால் செய்யப்படும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று அவல் ஆகும். அவல் வகையில் வெள்ளை மற்றும் சிவப்பு அவல் என இரு வகைகள் உள்ளன. அதிலும் சிவப்பு அவல் மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாகும். இதில் சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
சிவப்பு அவல்
அவலின் சிவப்பு நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமியே காரணமாகும். இவையே அவலுக்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. இதில் சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
கொழுப்பைக் குறைப்பதற்கு
உடலில் அதிகளவு கொழுப்பு சேர்வதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க சிவப்பு அவலை எடுத்துக் கொள்ளலாம்
நீரிழிவு நோய்க்கு
சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசி உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதே சமயம், சிவப்பு அவல் இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் உடனடியாக கலக்காமல் இருக்க வைக்கிறது
உடலை வலுவாக வைக்க
உடலை பலவீனமாக வைத்திருப்பவர்கள் சிவப்பு அவலை எடுத்துக் கொள்ளலாம். இது உடலை வலிமையாக வைத்திருக்க உதவுவதாகக் கூறப்படுகிறது
இரத்த சோகையைத் தடுக்க
சிவப்பு அவல் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததாகும். இவை உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனைக்கு சிவப்பு அவல் சிறந்த தீர்வாகும்
குடல் ஆரோக்கியத்திற்கு
சிவப்பு அவல் புரோபாயாடிக் நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேடுக்கள் வளர்சிதை மாற்றத்தின் விளைவாக நல்ல பாக்டீரியாக்களைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் குடலை ஆரோக்கியமாக வைக்கிறது