பேபி கார்ன் சாப்பிடுவதை விரும்பாதவர் எவருமிலர். சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தையும் தரும் உணவுப் பொருளான பேபி கார்ன் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
அதிக நார்ச்சத்துகள், குறைந்த கலோரிகள்
இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்துகளைக் கொண்டிருப்பதால் உடல் எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இதில் உள்ள ஆரோக்கியமான மற்றும் இன்றியமையாத ஊட்டச்சத்துகள் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு
பேபி கார்னில் வைட்டமின் சி சத்துகள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன.
இதய ஆரோக்கியத்திற்கு
பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த பேபி கார்ன் இதயத்திற்கு உகந்த உணவாகும். இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
கண்பார்வை மேம்பாட்டிற்கு
லூடின் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற அத்தியாவசிய கரோட்டினாய்டுகள் பேபி கார்னில் உள்ளது. இவை கண் ஆரோக்கியத்தில் மிகுந்த பங்கு வகிக்கிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் பேபி கார்ன் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துகள் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக செயலாற்ற உதவுகிறது.