முடி அடர்த்தியா, மென்மையா வளர வேண்டும் என்பது பலரின் விருப்பம். இதில் முடியை அடர்த்தியாக வைக்க உதவும் இயற்கையான பொருள்கள் சிலவற்றைக் காணலாம்
கற்றாழை
கற்றாழையின் குணங்கள் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதுடன், மென்மையான முடியைத் தருகிறது. இது முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது
தேங்காய் எண்ணெய்
வழக்கமான கண்டிஷனர்களுடன் ஒப்பிடுகையில், தேங்காய் எண்ணெய் முடியின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் பண்பைப் பெற்றுள்ளது. இது முடியிலிருந்து புரத இழப்பைத் தடுக்கிறது
வெங்காய சாறு
இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது மயிர்க்கால்களுக்கு சிறந்த சுழற்சியை ஊக்குவித்து உச்சந்தலை பாதுகாப்பாக வைக்கிறது
ஆமணக்கு எண்ணெய்
இதில் ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
ரோஸ்மேரி எண்ணெய்
இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும், முடியின் அடர்த்தியை மேம்படுத்துவதற்கும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது
தேயிலை எண்ணெய்
இதில் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள், பூஞ்சை காளான் பண்புகள் நிறைந்துள்ளது. இது மயிர்க்கால்களை அவிழ்த்து வேர்களை வளரச் செய்கிறது