நித்தியகல்யாணி பூக்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தும் மருத்துவ குணங்களுக்குப் பெயற் பெற்றவையாகும். இதில் நித்தியகல்யாணி பூக்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
முடி கழுவுதல்
சில நித்தியகல்யாணி பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை குளிர்விக்க வேண்டும். ஷாம்பு செய்த பிறகு, இந்த தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இது தலைமுடி வலுவாக வைத்திருக்க உதவுகிறது
முடி எண்ணெய்
ஒரு கைப்பிடி அளவிலான நித்தியகல்யாணி பூக்களை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை சில நிமிடங்கள் சூடாக்கி, வடிகட்டி, உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து, மறுநாள் காலையில் கழுவி விடலாம்
உட்செலுத்தப்பட்ட எண்ணெய் பயன்பாடு
பசுமையான பூக்களை ஆலிவ் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைக்க வேண்டும். வேர்களில் இதைத் தெளிப்பதன் மூலம் முடிக்கு பளபளப்பு மற்றும் வலிமையைப் பெறலாம்
செம்பருத்தி பூக்களின் கலவை
தேங்காய் எண்ணெயில் நித்திய கல்யாணி மற்றும் செம்பருத்தி பூக்களை கலக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையை சூடாக்கி, உச்சந்தலையில் தடவி, ஒரு மணி நேரம் விட்டு பின்னர் கழுவி விடலாம்