நரைமுடியை கறுப்பாக்க மா இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Devaki Jeganathan
25 Oct 2023, 16:43 IST

மோசமான வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தம் காரணமாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. ஊட்டச்சத்து இல்லாததால், சிறு வயதிலேயே முடி நரைத்து வருகிறது. மா இலையை பயன்படுத்து முடியை எப்படி கறுப்பாக்குவது என இங்கே பார்க்கலாம்.

ஹேர் பேக்

கூந்தலை கருப்பாக்க, மா இலைகளால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தவும். ஹேர் பேக் முடியின் உச்சந்தலையை உள்ளிருந்து வலுப்படுத்தி முடியை கருப்பாக்குகிறது.

எப்படி செய்வது?

ஹேர் மாஸ்க் செய்ய, இரண்டு ஸ்பூன் ஆம்லா தூள் மற்றும் அரை கப் தயிர் எடுத்துக்கொள்ளவும். இப்போது, 20 முதல் 30 மா இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த இலைகளை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்யவும்.

அதன் பிறகு நெல்லிக்காய் தூள் மற்றும் தயிர் கலக்கவும். முறையாக தயார் செய்த இந்த ஹேர் மாஸ்க்கை தலைக்கு குளிப்பதற்கு முன் தலையில் தடவவும். 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.

பின்னர், 20 முதல் 25 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். ஹேர் மாஸ்க் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரின் உதவியுடன் தலை முடியை கழுவவும்.

வைட்டமின் நிறைந்தவை

மா இலைகளில் ஏராளமான வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது, இது முடியை வலுப்படுத்தும். கூடுதலாக, அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

மா இலைகளைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது முடிக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை நரைக்க விடாது.

நீளமான தலைமுடி

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ முடியை கருமையாக்குவது மட்டுமின்றி அவற்றின் நீளத்தையும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி கூந்தலும் பொலிவு பெறும்.