சம்மர் ஸ்டார்ட் ஆயிடுச்சி. முடி பாதுகாப்பா இருக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
27 Mar 2024, 11:00 IST

கோடைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் ஒன்று. இதில் கோடைக்காலத்தில் முடி பராமரிப்பு முறைகளைக் காணலாம்.

சூரியஒளியிலிருந்து பாதுகாத்தல்

சூரியஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தலைமுடியை சேதப்படுத்தி, முடி பிளவு, வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே நேரடி சூரியஒளியிலிருந்து தலைமுடியைப் பாதுகாக்க தொப்பி அல்லது துணி பயன்படுத்தலாம்

நீரேற்றமாக வைப்பது

உடல் மற்றும் முடியை நீரேற்றமாக வைக்க நிறைய தண்ணீர் அருந்தலாம். இதற்கு ஹைட்ரேட்டிங் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு சூடான நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

ஷாம்பு பயன்பாடு

தலைமுடியில் உள்ள அழுக்கு, வியர்வையை அகற்ற வாரத்திற்கு ஒரு முறை ஷாம்பூவைப் பயன்படுத்தலாம்

ஹீட் ஸ்டைலிங் கருவி தவிர்ப்பது

ஹேர் ட்ரையர்கள், ஸ்ட்ரெய்ட்னர்கள், கர்லிங் அயர்ன்கள் போன்ற ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாட்டைத் தவிர்க்கவும். இது தலைமுடியை சேதப்படுத்தலாம்

அடிக்கடி கழுவுதல்

கோடையில் உச்சந்தலையில் வியர்வை மற்றும் அழுக்குகள் சேரலாம். எனவே தலைமுடியை அடிக்கடி கழுவ வேண்டும். எனினும், இயற்கை எண்ணெய்களை அகற்றாத மென்மையான ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும்

ஆரோக்கியமான உணவு

தலைமுடி ஆரோக்கியமாக மற்றும் வலுவாக இருக்க வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்