உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெயையும் கொண்டு உங்கள் மயிர்க்கால்களை மசாஜ் செய்யவும். தேங்காய், பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் எதுவாக இருந்தாலும், ஹோலி விளையாடச் செல்லும் முன் மசாஜ் செய்யவும்.
முடிகளை கவனித்துக்கொள்ளுங்கள்
மீண்டும் முடிகளுக்கு அடர்த்தியான எண்ணெயை தடவவும் அல்லது முடிகளுக்கு ஹேர் க்ரீமையும் பயன்படுத்தலாம். உங்கள் உச்சந்தலையில் எண்ணெயுடன் மசாஜ் செய்வதற்கு முன் இதைப் பயன்படுத்துங்கள். மயிர்க்கால்கள் வறண்டு போகாமல் இருக்க கூடுதல் கவனம் தேவை.
தலையில் அனைத்து முடிகளையும் இறுக்கமாக வைத்திருக்கும் வகையில் ஸ்கார்ப் அல்லது துப்பட்டா கொண்டு நன்றாக கட்டிக்கொள்ளலாம். இதனால் ஹோலி வண்ணங்கள் உங்கள் முடியில் படிவது தடுக்கப்படும். இதனால் கூந்தல் நிறம் மாறுவது, சிக்கு பிடிப்பது போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஷாம்பு செய்வதற்கு முன்
ஹோலியை கொண்டாடிவிட்டு, தலைக்கு குளிக்கச் செய்கிறீர்கள் என்றால், முதலில் தண்ணீரில் நன்றாக முடியை அலசவும். அதன் பின்னர் ஷாம்பு போட்டு தேய்த்து குளித்தால் தலைமுடியில் படித்த ஒட்டுமொத்த நிறங்களும் மறைந்துவிடும்.
மீண்டும் எண்ணெய் தேயுங்கள்
தலைக்கு குளித்து முடித்ததும், மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த முடிக்கும் ஆயில் தடவுங்கள். ஹோலி வண்ணங்கள் உங்கள் தலைமுடியை முழுவதும் உலர வைக்கும். எனவே மீண்டும் ஒருமுறை எண்ணெய் தடவுவது கூந்தலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.