அடர்த்தியான கூந்தலுக்கு உதவும் மூலிகைகள் என்னென்ன தெரியுமா?
By Balakarthik Balasubramaniyan
08 Aug 2023, 16:25 IST
முடி உதிர்வு, நரைமுடி, மெல்லிய முடி போன்ற பிரச்சனைகள் இன்று பலரும் சந்திக்க கூடியவையாகும். வேதிப்பொருள்களுக்குப் பதில், சில இயற்கை முறைகளைக் கையாண்டு இவற்றைத் தீர்க்கலாம்.
இயற்கையான முறையில் தலைமுடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவ பல்வேறு மூலிகைகள் உள்ளன. முடி வளர்ச்சிக்கான மூலிகைகள் பாரம்பரியமாகக் கையாளப்படும் முறைகளில் ஒன்றாகும்.
கூந்தல் பிரச்சனைகளைச் சரி செய்வதில் முக்கியமான ஒன்றாக செம்பருத்தி உள்ளது. செம்பருத்தியை பல வகைகளில் பயன்படுத்தலாம். இது தலைமுடி உதிர்தலை நீக்கி, வளர ஆரம்பிக்கிறது.
ஆம்லா
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிர்வைத் தடுக்கவும், நரைமுடி பிரச்சனைக்குத் தீர்வாகவும் ஆம்லா உள்ளது.
பிரிங்ராஜ்
முடி பராமரிப்புக்கு ஒரு அதிசயமான மூலப்பொருள் ப்ரிங்ராஜ். இது கேசராஜா அல்லது முடியின் அரசன் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம், நீண்ட ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். தலைமுடிக்கு ஊட்டமளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி இலைகள் வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. தலைமுடி வளர்ச்சியை அபரிமிதமாகத் தூண்டக்கூடியது. இதற்கு ரோஸ்மேரி இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கார்னோசிக் அமிலமே காரணம் ஆகும்.
வேப்பம்பூ மற்றும் இலைகள்
வேப்பம்பூ நீரில் நோய் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு விளைவுகள் உள்ளன. இது பொடுகைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வேப்ப இலைகள் முடி நரைப்பதை தடுக்க உதவுகிறது. வேப்ப எண்ணெய்கள் மயிர்க்கால்களில் நன்கு ஊடுருவி முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.