தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். இதில் முடி வளர்ச்சிக்கு உதவும் சில எண்ணெய்களைக் காணலாம்
லாவண்டர் எண்ணெய்
லாவெண்டரில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமற்ற உச்சந்தலை கொண்டவர்களுக்கு நன்மை பயக்கும். இந்த லாவண்டர் எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்
தேயிலை எண்ணெய்
தேயிலை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது
தேங்காய் எண்ணெய்
இதில் நிறைந்துள்ள பண்புகள் முடி உடைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், தலைமுடியை புரத இழப்பு மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடி அடர்த்தியை மேம்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே முடி வளர்ச்சியை விரும்புபவர்கள் ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்தலாம்
ஆலிவ் எண்ணெய்
இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைத்து தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
ஆமணக்கு எண்ணெய்
கொழுப்பு அமிலங்கள், லினோலெனிக் அமிலம், ஒலிக் அமிலம் போன்றவை ஆமணக்கு எண்ணெயில் நிறியந்துள்ளது. மேலும், வைட்டமின் ஈ மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை முடி சேதத்தைத் தடுக்கவும், முடி மீண்டும் வளரவும் உதவுகிறது