மருதாணி என்றழைக்கப்படும் ஹென்னா, மரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தாவர அடிப்படையிலான சாயமாகும். இதில் முடிக்கு வண்ணம் தீட்ட உதவும் இயற்கையான வண்ணமயமான நிறமி உள்ளது. இது முடிக்குப் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்
முடி வலிமைக்கு
இது இயற்கையான ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் முடி தண்டுகளில் உள்ள முடி சேதத்தை சரி செய்ய உதவுகிறது. இது முடியின் வலிமை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவில் மருதாணியைப் பயன்படுத்துவது முடி உடைவு, நுனிமுடி பிளவைக் குறைக்க உதவுகிறது
முடி நிற மேம்பாட்டிற்கு
மருதாணி ஒரு பிரபலமான இயற்கை முடி சாயமாகும். இது முடியின் இயற்கையான நிறமியை அதிகரிக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்திக்கு வழிவகுக்கலாம். இதனால், முடி சேதம், இழப்பு, முன்கூட்டியே நரைப்பது போன்ற ஏற்படலாம். இந்நிலையில், மருதாணியின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
பொடுகு நீங்க
மருதாணியின் பூஞ்சை எதிர்ப்பு பண்பு காரணமாக, இது முடியை ஈரப்பதமாக்குவதன் மூலம் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பொடுகு பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சியான பண்புகள் போன்றவை உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டபடி இதைப் பயன்படுத்துவது பூஞ்சை தொற்றுகளைக் குணப்படுத்தவும், உச்சந்தலை அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது
முடி பளபளப்பை அதிகரிக்க
மருதாணி பயன்பாடு முடி தண்டுகளை பூசி, முடிகளுக்கு நிறம், வலிமை மற்றும் பளபளப்பைத் தருகிறது. மேலும், மந்தமான, பளபளப்பற்ற முடிகளுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்