தினமும் ஸ்குவாட்ஸ் செய்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் ஸ்குவாட்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
தசைகளை உருவாக்க
ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி கால்கள் மட்டுமின்றி உடல் முழுவதும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. அதாவது தசை வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது
சமநிலை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த
வயதாகும் போது, உறுதியான கால்களை வைத்திருப்பது சமநிலை மற்றும் இயக்கத்தில் இருப்பது முக்கியமாகும். ஸ்குவாட்ஸ் பயிற்சி கால்களின் வலிமையை மேம்படுத்த உதவுகிறது
கொழுப்பை எரிக்க
ஸ்குவாட்ஸ் செய்வது கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. இதில் தசைகள் வலுப்பெறும் போது உடலிலிருந்து அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது
காயங்களைத் தடுக்க
ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி, தசைநார்கள் மற்றும் ஸ்டெபிலைசர் தசைகளை வலுப்படுத்துகின்றன. இதனைச் செய்வது சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதுடன், சாத்தியமான காயங்களைத் தடுக்க உதவுகிறது
வயிற்றை வடிவமைக்க
ஸ்குவாட்ஸ் செய்வது முதுகில் அழுத்தம் கொடுக்காமல், பிட்டத்தை உறுதியாகவும் பெரிதாகவும் மாற்றும். இது வயிறு மற்றும் கால்களை இறுக்கி வடிவமாக வைக்க உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்த
ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் உதவுகிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், சீராக வைத்திருக்கவும் உதவுகிறது