தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடல் நலத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அந்த வகையில் ரிவர்ஸ் வாக்கிங் சிறந்த கார்டியோ உடற்பயிற்சி ஆகும்
ரிவர்ஸ் வாக்கிங்
பின்னோக்கி நடப்பது ஒட்டுமொத்த உடல் எடை இழப்பு மற்ரும் உடல் அமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தருகிறது
கால்களை வலுப்படுத்த
வழக்கமாக முன்னோக்கி நடந்து கொண்டிருப்பது, கால்களின் பின்புறத்தில் உள்ள தசைகளை ஈடுபடுத்தாது. இதற்கு ரிவர்ஸ் வாக்கிங் செய்வது தசைகளை இயக்கச் செய்து கால்களை வலுவாக்கும்
சமநிலை மேம்பாடு
ஆய்வு ஒன்றில், பின்னோக்கிய நடைபயிற்சி உடலில் சமநிலையை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது உணர்வுகளை அமைதியாக வைத்திருக்கும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது
கவனத்தை மேம்படுத்த
வழக்கமான இயக்கத்திற்கு எதிராகச் செல்வது உடலில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். இது தங்களது கவனத்தை மேம்படுத்த உதவும்
முதுகுவலியைத் தடுக்க
தொடை எலும்புகளில் நெகிழ்வுத்தன்மை இல்லையெனில், அது கீழ் முதுகுவலியை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் தலைகீழ் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்
குறைவான அழுத்தத்தை ஏற்படுத்த
முழங்கால் வலி அல்லது காயம் உள்ளவர்கள், முழங்காலில் அதன் தாக்கம் மிகக் குறைவாக இருப்பதால், பழைய நிலைக்குக் கொண்டுவர ரிவர்ஸ் வாக்கிங் செய்யலாம்