டைப் 2 நீரிழிவு நோய் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையாகும். இதில் டைப் 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணிகள் சிலவற்றைக் காணலாம்
உடல் பருமன்
அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நீரிழிவு நோயின் முக்கிய ஆபத்துகளில் ஒன்றாகும். எனவே எடையைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது
செயலற்ற தன்மை
உடல் பருமனால் செயலற்ற தன்மை உண்டாகலாம். இது நீரிழிவு நோயினை அதிக ஆபத்தில் வைக்கும். எனவே உடல் செயல்பாட்டில் ஈடுபட்டு எடையை நிர்வகிப்பது அவசியமாகும்
புகைபிடிப்பது
புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிப்பவர்களுக்கே டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 முதல் 40% அதிகமாக உள்ளது. எனவே புகைபிடித்தலைத் தவிர்க்க வேண்டும்
PCOS பிரச்சனை
பிசிஓஎஸ் அல்லது பிசிஓடி பிரச்சனை இருப்பது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை உருவாக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் பருமன், அதிக முடி வளர்ச்சி போன்றவை நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் காரணியாகும்
வயது
குறிப்பாக 45 வயதிற்குப் பிறகு, வயதாகும் போது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயமும் அதிகமாகலாம். இதற்கு தினந்தோறும் லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்