சர்க்கரை அளவை சட்டென குறைக்க பிரியாணி இலையை இப்படி பயன்படுத்துங்க!

By Kanimozhi Pannerselvam
22 Jan 2025, 23:52 IST

சூப்களில் சேர்க்கவும்

சூப்கள் மற்றும் காய்கறிகளில் முழு பிரியாணி இலைகளையும் சேர்க்கவும்

தேநீரில் சேர்க்கவும்

மசாலா தேநீர் தயாரிக்கும் போது சுக்கு, மிளகு, லவங்கம், ஏலக்காய் உடன் சிறிதளவு பிரியாணி இலை அல்லது பொடியையும் கலந்து கொதிக்கவைக்கலாம்.

பிரியாணி இலை தண்ணீர்

இரவில் ஒரு பிரியாணி இலையை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

மோர் அல்லது ரைத்தாவில்

பிரியாணி இலைகளை மோர் அல்லது ரைத்தாவில் சின்ன, சின்ன துண்டுகளாக்கி சேர்க்கலாம்.

பொடியாகவும் உதவும்

உலர்ந்த பிரியாணி இலைகளை பொடியாக அரைத்து உங்கள் உணவில் சேர்க்கவும்.

எவ்வளவு சாப்பிட வேண்டும் ?

ஒரு நாளைக்கு 1 முதல் 3 கிராம் பிரியாணி இலைகளை 30 நாட்களுக்கு உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எப்போது சாப்பிட வேண்டும்?

உங்கள் வழக்கமான மருந்துகளுடன் பிரியாணி இலைகளை சாப்பிடுங்கள். காலையில் முதலில் பிரியாணி இலை தண்ணீரை குடிக்கவும்.