வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா?
By Kanimozhi Pannerselvam
06 Apr 2025, 22:37 IST
வெதுவெதுப்பான நீரில் நெய்யை கலந்து குடித்து வருவது சருமம் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. நெய்யில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்ஸ்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
தினமும் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் சருமத்தின் நிறம் மேம்படும்.
மேலும் குடல் அழற்சி குறைந்து செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இந்த பழக்கம் வாயு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதோடு, அதீத பசியை கட்டுப்படுத்துகிற
நெய்யில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் உடலில் இருக்கும் ஹார்மோன்கள் சமநிலையுடன் இருக்க மிகவும் உதவியாக இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது.
நெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
நெய்யில் உள்ள சத்துக்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் மூலம் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு வழங்குகிறது.