தும்பை பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?

By Kanimozhi Pannerselvam
22 Jun 2025, 22:58 IST

சளி, இருமலை குணப்படுத்த

தும்பை இலை மற்றும் பூக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கசாயம் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்.

தலைவலி மற்றும் தலைபாரம் நீங்க

தும்பைப் பூவை அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி, தலைபாரம் நீங்கும். தும்பை சாறுடன் சோற்றுக் கத்தாழையை சேர்த்து பூசினால் சொறி, சிரங்கு குணமாகும்.

பூச்சிக்கடிக்கு

தும்பை இலையை அரைத்து பூச்சிக் கடிபட்ட இடத்தில் தடவினால் கடி மற்றும் அரிப்பு குணமாகும்.

தொண்டை புண் குணமாக

தும்பைப் பூவை மென்று சாப்பிட்டால் தொண்டை புண் குணமாகும்.

காது வலிக்கு

தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி காதில் விட்டு வர காது வலி குணமாகும்.

தேமல் நீங்க

தும்பைச் செடியை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் தேமல் குணமாகும்.